ரஜினி, கமலை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்த தனுஷ்…

ரஜினி, கமலை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்த தனுஷ்…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் என்றால் ரஜினியும், கமலும்தான். அரைநூற்றாண்டுக்கும் மேலாக திரையுலகில் வேரூன்றி இருக்கின்றனர் இருவரும். தொழில்நுட்பம் வளர வளர அதற்கேற்றார்போல் தங்களை அப்டேட் செய்துகொண்டு இருவரும் தங்களை அதில் இணைத்துக்கொண்டனர். ரஜினிகாந்த் 2013ம் ஆண்டும், கமல்ஹாசன் 2015ம் ஆண்டும் டுவிட்டரில் இணைந்தனர். ஆனால் எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர்  கமல்ஹாசன் தான்.

ரஜினி, கமலை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்த தனுஷ்…

சூப்பர் ஸ்டாரை விட உலக நாயகனே அதிகம் ட்வீட்களை செய்துள்ளார். கட்சி தொடங்கிய பின்னர் அன்றாட நிகழ்வுகளை ட்விட்டரில் விமர்சிக்கத்தொடங்கினார். ட்விட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் எனவும்  கமல்ஹாசன் மீது  எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தது. ரஜினி அவ்வப்போது ஏதேனும் முக்கிய கருத்துக்கள் அல்லது வாழ்த்துக்கள் தெரிவிக்கவே ட்விட்டர் பக்கம் தலைகாட்டுவார். முன்னதாகவே ட்விட்டரில் அடியெடுத்து வைத்தாலும் ரஜினியை விட கமல்ஹாசனின் ஃபாலோயர்களே அதிகம்.

ரஜினி, கமலை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்த தனுஷ்…

ரஜினிகாந்தை ட்விட்டரில் 57 லட்சம் பேரும்,   கமல்ஹாசனை 60 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர்.  கடந்த  வாரத்தில்தான் கமல்ஹாசன் 60 லட்சம் ஃபாலோயர்களைக் கடந்தார். இருப்பினும் தமிழ் நடிகர்களைப் பொறுத்தவரையில் ரஜினி, கமலை பின்னுக்குத்தள்ளி நடிகர் தனுஷ், ட்விட்டரில் 90 லட்சம் பாலோயர்களை கொண்டுள்ளார். அவரே ட்விட்டர் கணக்கில் அதிகம் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள தமிழ் நடிகர்களில் முதலிடத்தில் உள்ளார். 

ரஜினி, கமலை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்த தனுஷ்…

ரஜினி, கமலை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்த தனுஷ்…

ரஜினி, கமலை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்த தனுஷ்…

Share this story