ராகுல் காந்தியுடன் டேட் செய்ய விரும்பிய கரீனா கபூர்!

ராகுல் காந்தியுடன் டேட் செய்ய விரும்பிய கரீனா கபூர்!

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியுடன் டேட்டிங் செய்ய விரும்பியதாக கூறியது வைரலாகி வருகிறது.

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியுடன் டேட்டிங் செய்ய விரும்பியதாக கூறியது வைரலாகி வருகிறது.

கரீனா கபூர் தனது திருமணத்துக்கு முன்பாக பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரை காதலித்து வந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் பிரிந்தனர். இதையடுத்து, தன்னைவிட அதிக வயதான சைஃப் அலிகானை காதல் வயப்பட்டு இரண்டாம் தாரமாக அவரை திருமணம் செய்துக் கொண்டார். தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை உள்ளது.

ராகுல் காந்தியுடன் டேட் செய்ய விரும்பிய கரீனா கபூர்!

இந்நிலையில், கடந்த 2002ம் ஆண்டுகளில் நடிகை கரீனா கபூர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விரும்பியதாகவும், இருவரும் காதலை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஒருவர் மீது ஒருவர் அக்கறைக் காட்டி வந்ததாகவும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

கரீனா கபூர் மற்றும் ராகுல் காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான பிரபல பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் தனது புத்தகத்தில் கரீனா ராகுல் காந்தியுடன் டேட்டிங் செய்ய விரும்பியதாக கூறியுள்ளார். இது பற்றி ஏற்கனவே பேச்சு எழுந்த நிலையில், நடிகை கரீனா கபூர் இதனை திட்டவட்டமாக மறுத்திருந்தார். மேலும், அது இரு குடும்பங்களும் நெருக்கமாக பழகியபோது நடந்த நிகழ்வுகள் என்று கரீனா தெரிவித்தார்.  

ராகுல் காந்தியுடன் டேட் செய்ய விரும்பிய கரீனா கபூர்!

ராகுல் காந்தி எம்.பி ஆவதற்கு முன்பே அவரை கரீனா நேசித்ததாக கூறப்படும் விஷயம் தற்போது மீண்டும் பரபரப்பாகி வருகிறது.

Share this story