ரித்விகா Vs ஐஸ்வர்யா?: ஜெயிக்கப்போவது யார்? மக்களின் வாக்கா பிக் பாஸின் செல்வாக்கா?

ரித்விகா Vs ஐஸ்வர்யா?: ஜெயிக்கப்போவது யார்? மக்களின் வாக்கா பிக் பாஸின் செல்வாக்கா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகும் போட்டி ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா இடையே தீவிரமாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகும் போட்டி ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா இடையே தீவிரமாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நாளை(செப்.30) நடைபெறுகிறது. இந்த சீசனின் இறுதிப்போட்டியாளர்களான ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி மற்றும் ஜனனி ஆகியோரில் யார் பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் செல்லப்போகிறார் என்ற அறிவிப்பை கமல்ஹாசன் நாளை அறிவிக்கிறார்.

இந்நிலையில், பிக் பாஸின் டைட்டில் வின்னரை நிர்ணயிக்கும் உரிமை மக்களிடத்தில் இருப்பதாக ஒரு பிம்பம் உருவாகியுள்ளது. உண்மையில் அது பிக் பாஸின் கையில் இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். மக்கள் மனதை வென்றுள்ள ரித்விகாவுக்கே அதிகபடியான வாக்குகள் இருப்பதாகவும், பிக் பாஸின் செல்லக்குட்டியான ஐஸ்வர்யா சற்று குறைவான வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரித்விகா Vs ஐஸ்வர்யா?: ஜெயிக்கப்போவது யார்? மக்களின் வாக்கா பிக் பாஸின் செல்வாக்கா?

பிக் பாஸ் டைட்டிலை வெல்வதற்கு தகுதியானவர் ரித்விகா தான் என கருத்துக்கள் நிலவி வந்தாலும், கடைசி நேரத்தில் பிக் பாஸ் கலர் கலர் சார்ட்டை காண்பித்து ஐஸ்வர்யா தான் டைட்டில் வின்னர் என்று அறிவித்துவிடுவார் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

kamalhaasan

இந்நிலையில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு இதில் ஏதும் சம்மந்தம் இருக்குமா? அல்லது நான் சொன்னா எங்கங்க கேக்குறாங்கன்னு ஒருமுறை ஷோவின் நடுவில் கூறியது போல், அவரது பேச்சு பிக் பாஸிடம் எடுபடவில்லையோ என்ற கேள்விகளும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. எது எப்படியோ, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை தனது அரசியல் லாபத்திற்காக கமல்ஹாசன் உபயோகப்படுத்திக் கொண்டார் என்ற பேச்சுக்களும் உள்ளது.

ரித்விகா Vs ஐஸ்வர்யா?: ஜெயிக்கப்போவது யார்? மக்களின் வாக்கா பிக் பாஸின் செல்வாக்கா?

மக்களின் அதிகபடியான வாக்குகளை பெற்ற ரித்விகாவை ஓரங்கட்டிவிட்டு ஐஸ்வர்யாவை டைட்டில் வின்னராக அறிவிக்கட்டும் அப்புறம் இருக்கு பிக் பாஸுக்கு என்று ரித்விகா ஆர்மியினர் கொதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஐஸ்வர்யா ஆர்மியினர், கூலாகவே இருப்போம் மற்றதெல்லாம் பிக் பாஸ் பார்த்துக் கொள்வார் என்று ஹாயாக இருக்கின்றனர்.

ரித்விகா Vs ஐஸ்வர்யா?: ஜெயிக்கப்போவது யார்? மக்களின் வாக்கா பிக் பாஸின் செல்வாக்கா?

பிக் பாஸ் டைட்டில் வின்னர் மக்களின் வாக்குகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவாரா அல்லது பிக் பாஸின் செல்வாக்கினால் ஐஸ்வர்யா டைட்டில் வின்னராவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

Share this story