லட்சுமி என்.டி.ஆர் படத்திற்கு இடைக்கால தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

லட்சுமி என்.டி.ஆர் படத்திற்கு இடைக்கால தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராம்கோபால் வர்மாவின் லட்சுமி என்.டி.ஆர் திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் இப்படத்துக்கு ஆந்திர பிரதேச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஆந்திரா: ராம்கோபால் வர்மாவின்  லட்சுமி என்.டி.ஆர் திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் இப்படத்துக்கு ஆந்திர பிரதேச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

என்.டி.ராமாராவின் வாழ்க்கை கதை

லட்சுமி என்.டி.ஆர் படத்திற்கு இடைக்கால தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

மறைந்த ஆந்திர முதல்வரும்  நடிகருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கைக் கதை கதாநாயகுடு, மகா கதாநாயகுடு என்ற பெயரில் இரண்டு படங்களாக வெளியானது. இயக்குநர்  கிரிஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், பாலகிருஷ்ணா, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால் இந்த படம் எதிர்பார்த்தளவு சரியாக ஓடவில்லை. 

லட்சுமி என்.டி.ஆர்

லட்சுமி என்.டி.ஆர் படத்திற்கு இடைக்கால தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்நிலையில்  இயக்குநர் ராம்கோபால் வர்மா என்.டி.ராமாராவின் வாழ்க்கையை லட்சுமி என்.டி.ஆர்  என்ற பெயரில் இயக்கியுள்ளார். இது என்.டி.ராமாராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதியையும்,என்.டி.ராமாராவையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.  இதில் பி.விஜய் குமார், யாக்னா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில்  என்.டி.ராமாராவின் மருமகனும், ஆந்திர பிரதேசத்தின் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

தேர்தல் நேரத்தில் வெளியிடக் கூடாது

லட்சுமி என்.டி.ஆர் படத்திற்கு இடைக்கால தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்நிலையில்  தெலுங்கு தேசம் கட்சி, இந்தப் படத்தைத் தேர்தலுக்கு முன் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடத்தில் புகார் மனு அளித்தனர். அதில், ‘ லட்சுமி என்.டி.ஆர் படத்தை ஒய் எஸ் ஆர் கட்சியைச் சேர்ந்த ராகேஷ் ரெட்டி என்பவர் தயாரித்துள்ளார். இது தேர்தல் பிரச்சாரத்துக்காக எடுக்கப்பட்ட திரைப்படம். அதனால் இதைத் தேர்தல் நேரத்தில் வெளியிடக் கூடாது’ என்று கோரிக்கை விடுத்திருந்தனர். 

இடைக்கால தடை

லட்சுமி என்.டி.ஆர் படத்திற்கு இடைக்கால தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

மேலும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில்  ஆந்திர நீதிமன்றத்திலும் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த  நீதிமன்றம், படத்துக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. அதுவரை படத்தை வெளியிடக் கூடாது என்றும்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: இரண்டாவது போட்டியிலும் தோல்வியைத் தழுவியது பெங்களூரு அணி

Share this story