வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ட்ரைலர் வெளியானது! உற்சாகத்தில் ரசிகர்கள்!

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ட்ரைலர் வெளியானது! உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகியுள்ளது

சென்னை: நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகியுள்ளது.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரிப்பில்  ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வருவதாக கூறப்பட்டு,பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ட்ரைலர் வெளியானது! உற்சாகத்தில் ரசிகர்கள்!

இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் டீசர், பாடல்கள் வெளியானது. படம் வெளிவர இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்படாமலே இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு 10 அளவில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டிரைலர் வெளியானது. அதில் வழக்கமான எனர்ஜிடிக் நடிப்பை கொடுத்துள்ள சிம்பு, டான்ஸ், ஹீரோயின் உடனான ரொமான்ஸ் என்று சிறப்பாக செயல்பட்டுள்ளார்.”அம்மாவுக்கு அப்புறம் நான் தான்னு பல பேர் நினைக்கிறாங்க.” என்று நடப்பு அரசியலை குறிக்கும் வசனமும் ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது. மேலும் ட்ரைலர் வெளியாகி 12மணி நேரத்திற்குள் 1மில்லியன் வியூஸ் கடந்துள்ள நிலையில் இப்படத்தின் மீதான ஆர்வம் சிம்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Share this story