வலதுசாரிகளால் தொடரும் எதிர்ப்பு: அச்சுறுத்தல்களுக்கு பயப்பட கூடாது: டி.எம். கிருஷ்ணா அதிரடி!

வலதுசாரிகளால் தொடரும் எதிர்ப்பு: அச்சுறுத்தல்களுக்கு பயப்பட கூடாது: டி.எம். கிருஷ்ணா அதிரடி!

டெல்லியில் நான் கண்டிப்பாக பாட வேண்டும் எனவும் இது போன்ற அச்சுறுத்தல்களுக்குப் பயப்படக்கூடாது எனவும் கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்

சென்னை: டெல்லியில் நான் கண்டிப்பாக பாட வேண்டும் எனவும் இது போன்ற அச்சுறுத்தல்களுக்குப் பயப்படக்கூடாது எனவும் கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்

கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா சிறந்த இளம் பாடகர், சிறந்த இசைக் கலைஞர், யுவ கலா பாரதி, கல்கி கிருஷ்ணமூர்த்தி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு மும்பையில் கொலாபா பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடந்த இசைவிழாவில் அல்லாவைப் பற்றி நாகூர் ஹனிபாவின் பாடலைப் பாடியதற்காக  டி.எம்.கிருஷ்ணா சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இந்து கடவுள்கள் மட்டுமில்லாமல் மற்ற யேசு, அல்லா கடவுள்கள் பற்றியும் பாடிவருவதால் வலது சாரிகள் டி.எம்.கிருஷ்ணாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் எங்கேயும் இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது எனவும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பூங்காவில் நடனம் மற்றும் இசை என்ற பெயரில் கலாச்சார நிகழ்வின் அங்கமாக டி.எம்.கிருஷ்ணாவின் இசைக்கச்சேரிக்கு ஸ்பிக் மேக்கே மற்றும் இந்திய ஏர்போர்ட் ஆணையம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு இணைய தளங்களில் வலது சாரி அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து, திடீரென சில காரணங்களால் நிகழ்ச்சி வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்கப்படும் என ஏர்போர்ட் ஆணையம் தகவல் வெளியிட்டது. வலது சாரிகளின் எதிர்ப்பே இதற்குக் காரணம் எனப் பரவலாக பேசப்பட்டது.ஆனால் ஏர்போர்ட் ஆணையம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டி.எம்.கிருஷ்ணா, டெல்லியில் எங்கேயாவது எனக்கு இடம் கொடுங்கள். நான் கண்டிப்பாக பாட வேண்டும். இவர்களின் அச்சுறுத்தலுக்கு நாம் பயப்படக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

Share this story