வலிமையுடன் தயாராகிறது அஜித்தின் வலிமை ! ரசிகர்கள் கூடுதல் எதிர்பார்ப்பு !

வலிமையுடன் தயாராகிறது அஜித்தின் வலிமை ! ரசிகர்கள் கூடுதல் எதிர்பார்ப்பு !

அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் நன்றாக உருவாகி வருவதாகவும், ஆக்ஷனுடன் சென்டிமென்ட் காட்சிகளும் இருப்பதாகவும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் நன்றாக உருவாகி வருவதாகவும், ஆக்ஷனுடன் சென்டிமென்ட் காட்சிகளும் இருப்பதாகவும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

போனி கபூர் தயாரிப்பில், விநோத்தின் கதை, திரைக்கதை, இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார் கதாநாயகனாக நடிக்க வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.  இந்த வருடம் அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படமாக வலிமை உருவாகி வருகிறது. இந்த படத்தை வினோத் இயக்குவதாலேய கூடுதல் எதிர்ப்பார்ப்பு என சினிமா ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது என்று மட்டுமே தற்போது வரை எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதில் அஜித் என்ன கெட்டப், யார் நடிக்கின்றார்கள் என்ற விவரங்கள்  தெரியவில்லை. அந்த வகையில் வலிமை படம் குறித்து நேற்று தயாரிப்பாளர் போனிகபூர் ஒரு விருது விழாவில் பேசினார். 
இதில் ‘வலிமை நன்றாக உருவாகி வருகின்றது, இப்படம் ஆக்ஷன் மட்டுமின்றி எமோஷ்னல் காட்சிகளும் கலந்த ஒரு படமாக உருவாகி வருகின்றது’ என கூறியுள்ளார்.

Share this story