வலிமை' டைட்டில் உரிமையை வழங்கிய அஜித்தின் தீவிர ரசிகர்!

வலிமை' டைட்டில் உரிமையை வழங்கிய அஜித்தின் தீவிர ரசிகர்!

அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள வலிமை படத்தின் தலைப்பு குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

வலிமை' டைட்டில் உரிமையை வழங்கிய அஜித்தின் தீவிர ரசிகர்!

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கிறார். இதற்காக அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார். தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். 

valimai

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வலிமை என்ற தலைப்பு கெனன்யா பிலிம்ஸ் உரிமையாளர் செல்வகுமாரிடம் இருந்ததாகக் கூறப்படுகிறது.  இந்த தலைப்பை உறுதி செய்த படக்குழு கடிதம் மூலம் செல்வகுமாரிடம்  அனுமதி கோரியுள்ளது.  அஜித்தின் தீவிர ரசிகரான செல்வகுமார், உடனே வலிமை தலைப்பைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு  வரும் டிசம்பரில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this story