வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் அறிவித்துள்ளார்.

வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் அறிவித்துள்ளார். 

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கிறார். இதற்காக அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார். தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யாமினி கவுதம் நடிக்கிறார்.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தப் படத்துக்கு பூஜை போடப்பட்டு நவம்பர் மாதத்திலிருந்து படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.  இந்த படத்தில்  அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்று உறுதியாகியுள்ள நிலையில் மற்றொரு கதாபாத்திரம் சஸ்பென்ஸாகவே உள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் கலந்து கொண்ட வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வலிமை படம் திரைக்குவரும் என அறிவித்துள்ளார். இயக்குநர் சிவா இயக்கும் நடிகர் ரஜினிகாந்தின் 168 திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பது குறிப்பிடதக்கது. 

Share this story