வழி மறித்த காவல்துறை: தெருவில் நடந்த இசைஞானி!

வழி மறித்த காவல்துறை: தெருவில் நடந்த இசைஞானி!

திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் சென்ற இசைஞானி இளையராஜா தெருவில் இறங்கி நடந்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் சென்ற இசைஞானி இளையராஜா தெருவில் இறங்கி நடந்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையாரை தரிசிக்க இசைஞானி இளையராஜா சென்றுள்ளார். தீபத்திருநாளை முன்னிட்டு நகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பிற்பகல் வேளையில் கோயிலுக்கு சென்ற இளையராஜாவின் காரை காவலர் ஒருவர் போக்குவரத்து நலன் கருதி தடுத்து நிறுத்தியுள்ளார். காரில் இருந்து இறங்கி வந்த இசைஞானியின் உதவியாளர், காவலருக்கு காரில் இருப்பது யார் என்பது குறித்து விளக்க முயற்சித்துள்ளார்.

ஆனால், கொளுத்தும் வெயிலில் பணியில் குறியாக இருந்த காவலர் உதவியாளர் கூறுவதை காதில் கூட வாங்கவில்லை. இதையடுத்து, பிரச்னையை பெரிதுப்படுத்தாமல் காரில் இருந்து இறங்கி தெருவில் நடக்க தொடங்கிவிட்டார் இளையராஜா. பொது இடத்தில் எவ்வித பாதுகாப்பும் இன்றி, மக்கள் கூடுவார்கள், வெயில், நெரிசல் என எதையும் பொருட்படுத்தாமல் பொது மக்களுடன் சேர்ந்து இசைஞானியும் நடந்துச் சென்றுள்ளார்.

இது குறித்த தகவல் திருவண்ணாமலை காவல்துறை வட்டார உயர் அதிகாரிக்கு செல்ல, அனைவருக்கும் தர்மசங்கடமானது. பின்னர் சம்மந்தப்பட்ட காவலர் காத்திருந்து இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Share this story