வாத்தி கமிங் பாடலுக்கு வளையம் வைத்து வளைந்து ஆடிய நடிகை!

வாத்தி கமிங் பாடலுக்கு வளையம் வைத்து வளைந்து ஆடிய நடிகை!

நடிகர் விஜயின் பிறந்தநாள் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா துறை சார்ந்தவர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்கள் முழுதும் ரசிகர்களின் வாழ்த்து மழையால் நிரம்பியிருந்தது. ட்விட்டரில் விஜய் பிறந்தநாள் ஹாஸ்டேக்குகள் தான் இந்திய அளவில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வந்தன. 

வாத்தி கமிங் பாடலுக்கு வளையம் வைத்து வளைந்து ஆடிய நடிகை!

ஒவ்வொருவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதமாக விஜய்க்கு தங்கள் வாழ்த்துக்களை வெளிப்படுத்தினர். மாஸ்டர் படக்குழு விஜய்க்கு ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். டிரட்மில் நடனம் மூலம் வைரலான நடிகர் அஸ்வின் மாஸ்டர் படத்தின் வாத்திகமிங் பாடலுக்கு நடனமாடி வாழ்த்து தெரிவித்திருந்தார். நடிகை கீர்த்தி சுரேஷ் வயலின் மூலம் குட்டி ஸ்டோரி பாடலுக்கு இசையமைத்து அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தார். 

[video:https://www.instagram.com/p/CBvVNwyF1Nw/?utm_source=ig_web_copy_link]

நடிகை சம்யுக்தா ஹெக்டேவும் இந்த வரிசையில் இணைந்துள்ளார். வாத்திகமிங் பாடலுக்கு  நடனமாடிய விஜய் நான் ஒரு மாதங்களுக்கு மேலாக வளைய நடனம் பயின்று கொண்டிருக்கிறேன்… பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி என்று தெரிவித்துள்ளார்.

Share this story