வார இறுதியில் குத்தாட்டம் போடும் பிரியங்கா சோப்ரா ! ஊரடங்கை மறந்து மெய்மறந்த ரசிகர்கள் !!

வார இறுதியில் குத்தாட்டம் போடும் பிரியங்கா சோப்ரா ! ஊரடங்கை மறந்து மெய்மறந்த ரசிகர்கள் !!

உலகம் முழுவதும் பரவிவிட் கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து காத்துக்கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில், பிரியங்கா சோப்ரா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கொரேனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளித்து பணத்தை திரட்டுவதும் ஒன்று. இவை அனைத்திற்கும் இடையில், ஊரடங்கின்போது சமூக ஊடகங்களில் தனது ரசிகர்களை மகிழ்விக்கவும் அவர் தவறுவதில்லை.

[video:https://www.instagram.com/p/B_yUHIrj9zQ/?utm_source=ig_web_copy_link]

பிரியங்கா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தன்னைப் பற்றிய ஒரு பி.டி.எஸ் வீடியோவைப் பகிர்ந்து கொண்டார், அதில் அவர் வார இறுதியில் நடனமாடுவதைக் காணலாம். இந்த வீடியோவை பார்க்கும்போது ஊரடங்கின்போது மனஉளைச்சலில் இருக்கும் நீங்கள் மீள்வது உறுதி. 

[video:https://www.instagram.com/p/CAOKMukDTDl/?utm_source=ig_web_copy_link]
ஒரு பஞ்சாபி போலவே தலைமுடியை அலங்கரித்துள்ள அவர் ஒரு குளியலறையில் நடனம் ஆடுவதை பாருங்கள். அவரது ஸ்டைலான சிகை அலங்காரம் அவரை மகிழ்விப்பதாக இருக்கிறது. பின்னணியில் உள்ள காட்சியைப் பார்த்தால், இந்த வீடியோ ஒரு படப்பிடிப்புக்கு முன்பே எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

[video:https://www.instagram.com/p/CAEEdoljpYy/?utm_source=ig_web_copy_link]

பிரியங்கா தனது கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள குடும்பத்தினருடன் தனது ஓய்வு நேரத்தை வீட்டிலேயே அதிகம் செலவிட்டு வருகிறார். தன்னை மற்றும் தனது அன்புக்குரியவர்களின் படங்களையும் வீடியோக்களையும் தனது ரசிகர்களுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டு வருகிறார் பிரியங்கா சோப்ரா.
இதற்கிடையில், பிரியங்கா கடைசியாக ‘தி ஸ்கை இஸ் பிங்க்’படத்தில் நடித்தார், இதில் ஃபர்ஹான் அக்தர் மற்றும் ஜைரா வாசிம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். நடிகை தனது அடுத்த திட்டத்தை இன்னும் அறிவிக்கவில்லை.

Share this story