விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகரின் தம்பி!

விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகரின் தம்பி!

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல தமிழ் நடிகரின் சகோதரர் நடித்துள்ளார்.

சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல தமிழ் நடிகரின் சகோதரர் நடித்துள்ளார்.

பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள ‘சீதக்காதி’ திரைப்படத்தில் நாடக கலைஞராக வித்தியாசமான தோற்றத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ளார். இது விஜய் சேதுபதியின் 25வது திரைப்படமாகும். இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிச.20ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு தினசரி வெளியாகி வருகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடித்த சுனில் என்பவரின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியானது. இவர் பிரபல தமிழ் நடிகர் வைபவின் தம்பி என தெரியவந்துள்ளது.

விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகரின் தம்பி!

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பாடகர் மனோ, தயாரிப்பாளர் சி.வி.குமார் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர்களால் நடிக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து பர்த்டே பார்ட்டி ஒன்றில் சுனிலை பார்த்த இயக்குநர் பாலாஜி தரணிதரன், சுனில் தான் இந்த கதாபாத்திரத்திற்கு செட்டாவர் என அவரை நடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Share this story