விஜய் 63 அப்டேட்: தளபதியுடன் ஜோடி சேரும் லேடி சூப்பர் ஸ்டார்?

விஜய் 63 அப்டேட்: தளபதியுடன் ஜோடி சேரும் லேடி சூப்பர் ஸ்டார்?

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் ‘விஜய் 63’ படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் ‘விஜய் 63’ படத்தில் நடிகை  நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் படத்தை அடுத்து விஜய், இயக்குநர் அட்லியுடன் 3 -வது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிப் படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படம் 2019-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் விவேக் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டையும் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, நடிகை நயன்தாராவுக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் நயன்தாரா. அடுத்து வரும் புத்தாண்டு உங்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமையும்’  என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பார்த்த விஜய் ரசிகர்கள் ‘விஜய் 63’ படத்தில் நடிகை நயன்தாராதான் ஹீரோயினா என்ற கேள்வியை முன் வைத்து வருகின்றனர்.

Share this story