வித்தியாசமான சூப்பர் ஹீரோ படமாக மிரட்டுகிறது ‘தி சூசைடு ஸ்குவாட்’.. டிரெய்லர் வெளியீடு

வித்தியாசமான சூப்பர் ஹீரோ படமாக மிரட்டுகிறது ‘தி சூசைடு ஸ்குவாட்’..  டிரெய்லர் வெளியீடு

முற்றிலும் மாறுபட்ட சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘தி சூசைடு ஸ்குவாட்’ படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

வித்தியாசமான சூப்பர் ஹீரோ படமாக மிரட்டுகிறது ‘தி சூசைடு ஸ்குவாட்’..  டிரெய்லர் வெளியீடு

சூப்பர் ஹீரோக்களின் படங்களிலேயே வித்தியாசமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி சூசைடு ஸ்குவாட்’. ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை ஜேம்ஸ் கன் இயக்கியுள்ளார். வார்னர் பிரதர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஆக்ஷனில் கலக்கியுள்ளது. இந்த படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸை டான் சூடிக் கவனித்துள்ளார்.

வித்தியாசமான சூப்பர் ஹீரோ படமாக மிரட்டுகிறது ‘தி சூசைடு ஸ்குவாட்’..  டிரெய்லர் வெளியீடு

இந்த படத்தில் ப்ளட் ஸ்போர்ட் கேரக்டரில் வில் ஸ்மித்துக்கு பதிலாக இட்ரிஸ் எல்பா நடித்துள்ளார். பீஸ் மேக்கர் கேரக்டரில் ஜான் சீனா நடித்திருக்கிறார். இவர் பிரபல ரெஸ்ட்லிங் வீரர் ஆவார். ஹார்லே குவின் கேரக்டரில் மீண்டும் மார்கட் ராபி நடித்திருக்கிறார்.

வித்தியாசமான சூப்பர் ஹீரோ படமாக மிரட்டுகிறது ‘தி சூசைடு ஸ்குவாட்’..  டிரெய்லர் வெளியீடு

இந்த படம் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. விஷுவல் எஃபெக்ட்ஸை மற்ற படங்களை விட சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. அதிரடியில் கலக்கியுள்ள இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Share this story