‘விஸ்வாசம்’ அப்டேட்: அஜித்-நயன்தாரா பற்றிய சுவாரஸ்ய தகவல்!

‘விஸ்வாசம்’ அப்டேட்: அஜித்-நயன்தாரா பற்றிய சுவாரஸ்ய தகவல்!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் கேரக்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் கேரக்டர் பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் 4வது முறையாக அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இரட்டை வேடத்தில் அஜித் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் ரிலீசாகி வைரலானது.

‘பில்லா’, ‘ஏகன்’, ‘ஆரம்பம்’ படங்களை அடுத்து அஜித்-நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தில் இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விஸ்வாசம் படத்தில் இருவருக்கு திருமணம் ஆகும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு மகளாக ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா நடித்துள்ளார்.

விஸ்வாசம் படம் குறித்த இந்த தகவல் தல ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

Share this story