வைரலாகி வரும் நயனின் பேமிலி போட்டோ…உள்ளே!

வைரலாகி வரும் நயனின் பேமிலி போட்டோ…உள்ளே!

தனது காதலருடன் நியூயார்க் பறந்துள்ள நயன் அங்கு தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நடிகர்களின் ஆளுமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியம். ஆனால், தான் அறிமுகமான நாளிலிருந்து தற்போது வரை உச்ச இடத்திலேயே நிற்கிறார் நயன்தாரா.

வைரலாகி வரும் நயனின் பேமிலி போட்டோ…உள்ளே!

ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டும் நயன்தாரா இன்று தனது 35வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.  தனது காதலருடன் நியூயார்க்  பறந்துள்ள நயன் அங்கு தனது பிறந்தநாளை  கொண்டாடி வருகிறார். 

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது அம்மா -அப்பாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நயனின் தந்தை இந்திய விமானப் படையில் அதிகாரியாக பணியாற்றியவர்.

இவரின் குடும்பம் கேரளாவில் வசித்து வருகிறது. நயன்தாராவிற்கு லெனோ என்ற அண்ணனும் உள்ளார். தற்போது அவர் துபாயில்  பணியாற்றி வருகிறார்.  இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள்  அதை வைரலாக்கி  வருகின்றனர். 

Share this story