ஷூட்டிங் ஸ்பாட்டில் பஜ்ஜி சுட்டு அசத்திய நடிகர் சூரி…வைரல் வீடியோ!

ஷூட்டிங் ஸ்பாட்டில் பஜ்ஜி சுட்டு அசத்திய நடிகர் சூரி…வைரல் வீடியோ!

கலையரசன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

நடிகர் சூர்யாவின்  2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாராகி வரும் புதிய படத்தில்  நடிகை  ஜோதிகா, நடிகர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி கலையரசன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

ஷூட்டிங் ஸ்பாட்டில் பஜ்ஜி சுட்டு அசத்திய நடிகர் சூரி…வைரல் வீடியோ!

இந்நிலையில் படப்பிடிப்பில் ஓய்வு  நேரத்தில் நடிகர் சூரி அங்கு உணவு தயாரிக்கும் இடத்திற்குச் சென்று, படக்குழுவினருக்கு பஜ்ஜி சுட்டு தந்துள்ளார். இதற்கான வீடியோவை  இணையத்தில் வெளியிட்டுள்ள அவர், நீங்க shotuku கூப்பிடுங்க இல்ல கூப்டாம போங்க நம்மளுக்கு பஜ்ஜி போட்டே ஆகணும் என்று பதிவிட்டுள்ளார். 

பொதுவாக நடிகர் அஜித் தான் தன்னுடன் பணிபுரியும் நடிகர்களுக்குப் பிரியாணி சமைத்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல் சூரியும் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story