ஸ்டார் ஹோட்டலை சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கிய நடிகர் சோனு சூட்" சுகாதார ஊழியர்கள்தான் உண்மையான ஹீரோ"

ஸ்டார் ஹோட்டலை சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கிய நடிகர் சோனு சூட்" சுகாதார ஊழியர்கள்தான் உண்மையான ஹீரோ"

நெஞ்சினிலே ,கள்ளழகர் ,சந்திரமுகி ,ஒஸ்தி ,தேவி போன்ற தமிழ் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் 
சோனு சூட் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தனது பங்களிப்பை வியாழக்கிழமை அறிவித்தார். அவரின் இன்ஸ்டாகிராம் பதிவின் படி சோனு சூட் ஜுஹுவில் உள்ள தனது ஹோட்டலை மருத்துவர்கள் தங்குவதற்காக வழங்கியுள்ளார்.

[video:https://www.instagram.com/p/B-mu99RAJfi/?utm_source=ig_web_copy_link]

“இந்த  கடினமான நேரத்தில் இரவும் பகலும் அயராது உழைத்து வரும் தேசம் காக்கும் வீரர்களான அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் ஜூஹுவில் எனது ஹோட்டலைத் தருகிறேன் .இந்த ஹீரோக்கள் இப்போது செய்து வரும் மகத்தான கடமையைக் கருத்தில் கொண்டால் ,  நான் செய்வது மிகக் குறைவு. நாம்  அனைவரும் ஒன்றாக இருந்து அவர்களுக்கு ஆதரவளிப்போம் “என்று அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

[video:https://www.instagram.com/p/B-wQSAEAsq4/?utm_source=ig_web_copy_link]

நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்து வரும் நம் நாட்டின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்  மருத்துவ ஊழியர்களுக்காக இது அவரின் பங்கு என்றும், இந்த ஹீரோக்களுக்கு அவரது ஹோட்டலின் கதவுகளைத் திறந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Share this story