ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டார் நடிகை தீபிகா படுகோன்

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டார் நடிகை தீபிகா படுகோன்

பிப்ரவரி 24-ம் தேதி குளியல் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது இறப்பு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 நடிகை  ஸ்ரீதேவி உறவினர் திருமணத்திற்காகத் துபாய் சென்ற நிலையில் 2018ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி குளியல் தொட்டியில் தவறி விழுந்து  உயிரிழந்தார். அவரது இறப்பு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டார் நடிகை தீபிகா படுகோன்

இதையடுத்து ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று நூலான  Sridevi: Girl woman Superstar என்ற புத்தகத்தை சத்யார்த் நாயக் எழுதியுள்ளார். பெங்குவின் நிறுவனம் இப்புத்தகத்தை வெளியிட ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அனுமதியளித்துள்ளார். 

இந்நிலையில்  Sridevi: Girl woman Superstar என்ற வெளியீட்டு  விழா இன்று மும்பையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இப்புத்தகத்தை வெளியிட்டார். அவருடன் ஸ்ரீதேவி கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் உடனிருந்தார்.  இந்த புத்தக வெளியீட்டு விழாவில்  பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

முன்னதாக இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை  நடிகை வித்யாபாலன் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Share this story