ஸ்ரீதேவி இந்த பாடல்களைத் தான் விரும்பிக் கேட்பார்- அம்மா பற்றி ரகசியம் வெளியிட்ட ஜான்வி கபூர்!

ஸ்ரீதேவி இந்த பாடல்களைத் தான் விரும்பிக் கேட்பார்- அம்மா பற்றி ரகசியம் வெளியிட்ட ஜான்வி கபூர்!

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார். தற்போது ஒரு நேர்காணலில் தனது குழந்தைப் பருவ நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதாவது தான் அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்த காலங்கள் பற்றிய நினைவுகளை நினைவு கூர்ந்தார். மேலும் அவருக்கு இருக்கும் இசை ஆர்வம் தன் அம்மாவிடம் இருந்து பெற்றுள்ளார் என்ற ரகசியமும் வெளிப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி இந்த பாடல்களைத் தான் விரும்பிக் கேட்பார்- அம்மா பற்றி ரகசியம் வெளியிட்ட ஜான்வி கபூர்!

சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்துவரும் ஜான்வி தனது ரசிகர்களை ஈர்ப்புடன் வைத்துள்ளார். அவர் அவ்வவ்போது பகிரும் படங்கள்  அனைத்தும் சமூக ஊடகங்களை நிரப்பி விடும். மேலும் இந்த ஊரடங்கு நேரத்தில் அனைவரும் தமக்குள் ஒளிந்துகிடக்கும் திறமைகளைத் தட்டி எழுப்பி வருகின்றனர். இதற்கு ஜான்வியும் விதிவிலக்கல்ல. அவரிடமும் ஊரடங்கு அவரை எவ்வாறு உணரச்செய்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “இந்த நேரத்தில் பியானோ அல்லது புத்தகங்கள் படிக்க முயற்சித்ததாக கூறினார். 

[video:https://www.instagram.com/p/CA7ut9mFD7M/?utm_source=ig_web_copy_link]

குழந்தை பருவ நினைவுகள் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது, அதற்கு “தான் குழந்தையாக இருந்தபோது தன் அம்மா ஸ்ரீதேவி எப்போதும் தமிழ் மற்றும் தெலுங்கு பாடல்களை விரும்பிக் கேட்பார் என்று தெரிவித்தார். அந்த பாடல்களை தான் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படுவதையும் தெரிவித்தார். 
லாக்டவுன் முடிந்தவுடன் நீங்கள் செய்ய விரும்பும் முதல் செயல் என்ற கேள்விக்கு நடிக்க விரும்புவதாகவும் அந்த செட்டுக்குள் நுழைய விரும்புவதாவும் கூறினார். ஊரடங்கிற்குப் பின்னர் அவர் ஆசை நிறைவேற நாமும் பிரார்த்திப்போம்!

Share this story