ஸ்ருதி ஹாசனின் வித்தியாசமான போஸ்.. வைரலாகும் வேடிக்கை புகைப்படங்கள்…

ஸ்ருதி ஹாசனின் வித்தியாசமான போஸ்..  வைரலாகும் வேடிக்கை புகைப்படங்கள்…

7 ஆம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கால்பதித்த ஸ்ருதிஹாசன், முன்னதாக ‘லக்’ என்னும் இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு ரவுண்ட் வந்தார். பாடகியான ஸ்ருதிஹாசன் சினிமாவில் பல பாடல்களையும் பாடியுள்ளார். மேலும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
 
தற்போது நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் தியேட்டர்கள் என அனைத்து பொழுதுபோக்கு இடங்களும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழித்து வருகிறார்கள்.
ஸ்ருதி ஹாசனின் வித்தியாசமான போஸ்..  வைரலாகும் வேடிக்கை புகைப்படங்கள்…
 
அதேபோல்  நடிகை சுருதிஹாசனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் செய்யும் சுவாரஸ்யமான செயல்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பகிர்ந்து வருகிறார். உடற்பயிற்சி செய்வது, பாடுவது, சமைப்பது என பதிவிட்டு வந்த அவர், தனது பியானோவுடன் சில இசை கலையை முயற்சித்து வருவதாக பதிவிட்டார். அந்த வரிசையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் கடவுளான முருகனின் வேல் ஆயுதம் ட்ரின்ட் செய்யப்பட்டிருந்த டி-சர்ட்டை அணிந்திருந்த  ஸ்ருதி ஹாசன் கடவுளை போல தனது கைகளை வைத்துக் கொண்டு ஸ்ருதி ஹாசன் போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் பல வேடிக்கையான போஸ் கொடுக்கும் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஸ்ருதி ஹாசனின் வித்தியாசமான போஸ்..  வைரலாகும் வேடிக்கை புகைப்படங்கள்…
 
ஸ்ருதி ஹாசனின் வித்தியாசமான போஸ்..  வைரலாகும் வேடிக்கை புகைப்படங்கள்…
 
 

Share this story