ஹாலிவுட் செல்லும் தளபதி விஜய்யின் ‘தளபதி 63’!

ஹாலிவுட் செல்லும் தளபதி விஜய்யின் ‘தளபதி 63’!

தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ படத்திற்கான ஷூட்டிங் லொகேஷன் பார்க்கும் படலம் தொடங்கியுள்ளது.

சென்னை: தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ படத்திற்கான ஷூட்டிங் லொகேஷன் பார்க்கும் படலம் தொடங்கியுள்ளது.

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய்-அட்லி கூட்டணியில் அடுத்ததாக உருவாகவிருக்கும் ‘தளபதி 63’ படத்தின் ஷூட்டிங் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான லொகேஷ் பார்க்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும், நடிகர்கள் விவேக், யோகி பாபு ஆகியோர் காமெடி நடிகர்களாக நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கியமான காட்சிகள் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகைப்படங்களை ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்போர்ட்ஸ் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் அத்லட்டாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story