100 அடி ஆழத்தில் டூப் போடாமல் குதித்து அசத்திய தல: விரைவில் சென்னையில் வலிமை ஷூட்டிங்!

100 அடி ஆழத்தில் டூப் போடாமல் குதித்து அசத்திய தல: விரைவில் சென்னையில் வலிமை ஷூட்டிங்!

சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார். தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கிறார். இதற்காக அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருந்து புது கெட்டப்பில் மாறியுள்ளார். தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது.

100 அடி ஆழத்தில் டூப் போடாமல் குதித்து அசத்திய தல: விரைவில் சென்னையில் வலிமை ஷூட்டிங்!

இந்த படத்தில்  அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.போலீஸ் அதிகாரி கேரக்டர் என்பதால்  கார் சேசிங் காட்சிகள்  படத்தில் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.  இப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கியுள்ள நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பே ஸ்டண்ட் காட்சிகள் தானாம். அஜித் 100 அடியில் ஆழத்தில் குதிப்பது போல் ஒரு காட்சி எடுக்கப்பட்டதாகவும், அதை அஜித் டூப் இல்லாமல் நடித்து கொடுத்ததாகவும் தகவல் வெளியகியாகியுள்ளது.ஐதராபாத்தில் படப்படிப்பு முடியவுள்ள  நிலையில் சென்னையில் ஷூட்டிற்காக செட் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story