16 வயது குறைவானவருடன் திருமணமா? பிரபல நடிகை சுஷ்மிதா சென் விளக்கம்

16 வயது குறைவானவருடன் திருமணமா? பிரபல நடிகை சுஷ்மிதா சென் விளக்கம்

27 வயது இளைஞரை நடிகை சுஷ்மிதா சென் திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்திக்கு அவர் பதிலளித்துள்ளார்.

மும்பை: 27 வயது இளைஞரை நடிகை சுஷ்மிதா சென் திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்திக்கு அவர் பதிலளித்துள்ளார்.

முதல் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்று, பாலிவுட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், நடிகை சுஷ்மிதா சென். 42 வயதான இவர், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

ஆனால், ரெனீ, அலிசா என்ற இரண்டு பெண்களை தத்தெடுத்து தன்னுடனே வளர்த்து வருகிறார். இந்நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரோமன் ஷால்(வயது 27) என்ற இளம் மாடலுடன் சுஷ்மிதா சென்னுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

16 வயது குறைவானவருடன் திருமணமா? பிரபல நடிகை சுஷ்மிதா சென் விளக்கம்

இருவரும் பல நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சென்று வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

16 வயது குறைவானவரை சுஷ்மா திருமணம் செய்து கொள்கிறாரா? என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சுஷ்மிதா தன் ட்விட்டர் பக்கத்தில், “இந்த உலகம் என்னுடைய திருமண செய்தியை எதிர்பார்க்கிறது. ஆனால் எனக்கு விளையாட்டும் உடல் ஆரோக்கியமும் தான் முக்கியம். மற்ற வதந்திகள் காற்றோடு போகும். தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை. நான் ரோமனுடன் ரொமான்ஸில் மட்டுமே இருக்கிறேன்” என விளக்கம் அளித்துள்ளார்.
 

Share this story