Thursday, November 26, 2020

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

Movie Stills

#28YearsOfThevarmagan தேவர் மகன் -28: சர்ச்சையும் சாதனையும்

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் கமல்ஹாசன் இணைந்து நடித்த ‘தேவர் மகன்’ திரைக்கும் வந்து நாளையுடன் 28 வருடங்கள் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, #28YearsOfThevarmagan ஹேஷ்டேக்கை இணையத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள் கமல் ரசிகர்கள்.

25.10.1992ல் தீபாவளி திருநாளில் இப்படம் திரைக்கு வந்தது. படத்தின் பாடல்களும், சிவாஜிகணேசனுடன் கமல்ஹாசன் இணைந்து நடிப்பதாலும், இப்படத்திற்காக கமல் வைத்திருந்த பங்க் ஸ்டைலும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே போலவே படமும் பெரு வெற்றி பெற்றது.

கதை, திரைக்கதை எழுதி நடித்து இப்படத்தை தயாரித்திருந்தார் கமல். பரதன் இயக்கியிருந்தார்.

லண்டனில் படிப்பை முடித்து சக்தி தனது சொந்த ஊருக்குத் தனது காதலி பானுமதியுடன் திரும்பி வருகின்றார். அங்கு தந்தையான பெரியத் தேவரைச் சந்தித்து தனது காதலியை அறிமுகமும் செய்து வைக்கின்றார். ஆரம்பத்தில் கோபம் கொள்ளும் பெரிய தேவர் பின்னர் அமைதி கொள்கின்றார். இதற்கிடையில் அவ்வூரில் இருக்கும் பெரிய தேவரின் சகோதரனின் பகை உணர்வுகளால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. பின்னர் அது கலவரமாகவும் வெடித்தது. இதற்கிடையில் வெளியூருக்குச் செல்லும் சக்தியின் காதலியோ பின்னாளில் வரும்பொழுது சக்தி வேறொருவரை மணம் செய்துள்ளது கண்டு கடுங்கோபம் கொள்கின்றார்.

சக்தியும் பெரியவர் ஒருவருக்குக் கொடுத்த வாக்கின்படியே தான் திருமணம் செய்ததெனக் கூறுகின்றார். இறுதியில் பெரிய தேவரின் சகோதரரின் மகனிடம் ஏற்படும் தகராறுகளினாலும் பலமுறை கூறியும் அவன் காவல்துறையினரிடம் சென்று செய்த தவறுகளைக்கூறவில்லை என்ற காரணத்தினாலும் அவனைத் துரத்துகின்றார் சக்தி. இதற்கிடையில் தெரியாத்தருணமாக அவரின் தலையையும் துண்டித்து விடுகின்றார். அவ்வூர் மக்கள் எடுத்துக் கூறியும் செய்த தப்பிற்காக தண்டனை பெறவும் செய்கின்றார் சக்தி.

பெரிய தேவராக சிவாஜிகணேசனும், சக்திவேலாக கமல்ஹாசனும், பானுமதியாக கவுதமியும், பஞ்சவர்ணமாக ரேவதியும், நடித்திருந்தனர். மாயாண்டித்தேவராக நாசர், சின்ன தேவராக காக்கா ராதாகிருஷ்ணனும் நடித்திருந்தனர். சக்திவேலின் மூத்த சகோதரராக தலைவாசல் விஜய் நடித்திருந்தார். எசக்கி கேரக்டரில் வடிவேலு இப்படத்தில் அசத்தியிருந்தார். இப்படத்தின் மூலமே வடிவேலுவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இளையராஜாவின் இசையில் 10 பாடல்களும் இனிமை.

மாநில அளவிலும் தேசிய அளவிலும் இப்படம் பல விருதுகளை குவித்தது.

சாதி வேண்டாம் என்று சொல்லுகிற சாக்கில் ஒரு சாதியை தூக்கி பிடித்திருக்கிறார் கமல் என்ற சர்ச்சை எழுந்தது. இந்த படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் கலைஞானம் இப்போதும் பேட்டி கொடுத்து பரபரப்பூட்டுகிறார். தேவர் மகன் படத்தின் கதை தன்னுடையது என்றும், அதுக்காக கமல்ஹாசன் 25 ஆயிரம் பணம் கொடுத்தார். அத்தனை பெரிய படத்துக்கு இத்தனை சிறிய தொகையா? இது நியாயமா? என்று தொடர்ந்து கலைஞானம் பேட்டிகளின் மூலமாக கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால் அதுகுறித்து எதுவும் பேசாமல் மவுனமாகவே இருக்கிறார் கமல்.

இதுமட்டுமா… நிறைய சர்ச்சைகளை சந்தித்தாலும் ’தேவர் மகன்’ நேற்றுதான் திரைக்கு வந்தது போலவே இப்போதும் அப்படம் குறித்து ரசிகர்களிடையே பரபரப்பான பேச்சு இருக்கிறது. இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பேச்சு அடிபட்டபோதே, இந்த காலத்தில் தேவர் மகன் என்ற டைட்டில் வைக்கமுடியுமா என்று தொடக்கத்திலேயே சர்ச்சை எழுந்தது.

கடந்த பிக்பாஸ் -3 சீசனில் பங்கேற்ற இயக்குநர் சேரன் கூட, ‘’சார், நான் தேவர் மகன் இரண்டாம் பாகத்துக்கான கதை வச்சிருக்கேன். நீங்க கேட்கணும்’’என்றார்.

ஒரு வாரத்தில் கமல் எழுதிய திரைக்கதை இத்தனை காலத்துக்கும் விவாதமாக இருப்பது ஆச்சரியம்தான்.

Latest Posts

ஆஸ்கார் விருதுக்கு தேர்வான மலையாள திரைப்படம் !

சினிமா துறையில் மிக பெரிய கௌரவ விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளது .

சிம்புவுக்கு குவியும் படவாய்ப்புகள் ! 2021 சிம்புவுக்கு அமோகம் தான் !

முன்பெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சரியாக போகாமல் வம்பு செய்யும் நடிகர் சிம்பு தற்போது படப்பிடிப்புகளில் ஒழுக்கமாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து முடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்...

பிஜேபி பிரபலத்தை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்,பதிலுக்கு அவர் சொன்னது என்ன தெரியுமா ?

ஊர் வம்பை எல்லாம் இழுத்து தன் தலையில் போட்டுக் கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தற்போது நடிகை குஷ்பூவை வம்புக்கு இழுத்துள்ளார்.

முறுக்கு மீசையுடன் மிரட்டலான லுக்கில் விஜய் சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில்...

Actress

Do NOT follow this link or you will be banned from the site!