45 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் உணவளித்து வரும் நடிகர் ..

45 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் உணவளித்து வரும் நடிகர் ..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.  331 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்  தினக்கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு பிரபலங்கள் உதவி செய்து வரும் நிலையில், நடிகர் சோனு சூட் மும்பையில் மாநகராட்சியுடன் இணைந்து தினமும் 45 ஆயிரம் பேருக்கு உணவளித்து வருகிறார்.

பாலிவுட் பிரபலமான சோனு, தமிழில் நெஞ்சினிலே, மஜ்னு, ராஜா, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய அப்பாவின் பெயரில் சக்தி அன்னதானம் எனத் தொடங்கி,  அதன் மூலம் ஏழை மக்களுக்கு உணவும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகிறார். மேலும், தன்னுடைய 6 மாடி சொகுசு ஹோட்டலை கொரோனா சிறப்பு தனி மருத்துவமனைக்காக திறந்து விட்டுள்ளார்.

45 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் உணவளித்து வரும் நடிகர் ..

 

Share this story