கே.எஸ்.ரவிக்குமார் ஹீரோவாக நடிக்கும் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25

கே.எஸ்.ரவிக்குமார் ஹீரோவாக நடிக்கும் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25

தமிழில் ஹிட் அடித்த ஒரு ஓல்டு படத்தை பிற மொழியில் தழுவி அங்கே ஹிட் அடித்த பிறகு , அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்த கூத்து எல்லாம் நடந்திருக்கிறது. அப்படி இருக்கையில், மலையாளத்தில் ஹிட் அடித்த ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25’ படம் ROBOT&FRANKஎனும் சினிமாவே அமெரிக்க சினிமாவின் தழுவல்தான் என்று சொல்லப்படும் நிலையில், அந்த மலையாள சினிமா தமிழில் ரீமேக் ஆகிறது.

கே.எஸ்.ரவிக்குமார் ஹீரோவாக நடிக்கும் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கே.எஸ்.ரவிக்குமார் பெற்றிருக்கிறார். ரவிக்குமார் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியதுமே அவர் இயக்கப்போகிறார் என்றுதான் பேசப்பட்டது. ஆனால் அவர் இப்படத்தினை தயாரிக்கிறார். குஞ்சப்பன் கேரக்டரிலும் நடிக்கிறார்.

கிராமத்து பழைய வீட்டில் இக்காலத்துக்குரிய எந்த நவீன வசதிகளும் இல்லாமல் வசிக்கும் குஞ்சப்பன் தன் மகனை பொறியியல் படிக்க வைக்கிறார். அந்த மகன் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றதும் தந்தையை பிரிய மனமில்லாமல் அவரையும் உடன் அழைத்துச்செல்கிறார். அங்கேயும் வேலைக்கு சென்றுவிடுவதால் தந்தைக்கு துணையாக ஒரு ரோபோவை வாங்கி வருகிறார். கடைசியில் அந்த ரோபோவை பிரிய நேருகிறது. எந்திரம் நிரந்தரம் அல்ல, மனிதம்தான் நிரந்தரம் என்று அன்பை போதிக்கும் இப்படம் கேரளாவில் கடந்த ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்டது.

கே.எஸ்.ரவிக்குமார் ஹீரோவாக நடிக்கும் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25

அப்படத்தில் குஞ்சப்பன் கேரக்டர்தான் முக்கியமானது. கதையின் ஹீரோ குஞ்சப்பன் தான். அந்த கேரக்டரில் நடிக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ரவிக்குமார் இப்படத்தின் மூலமாக ஹீரோவாகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் ஹீரோவாக நடிக்கும் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25
கே.எஸ்.ரவிக்குமார் ஹீரோவாக நடிக்கும் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25

இப்படத்தை டைரக்‌ஷன் செய்யும் சபரி, கே.எஸ்.ரவிக்குமாரின் நெருங்கிய உறவினர். தன்னிடம் உதவியாளராக இருந்த அவர் டைரக்டர் ஆக தானே ஒரு தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார் ரவிக்குமார். தயாரிப்பிலும் லாபம் வரவேண்டும். உறவினரின் முதல்படமும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25 படத்தின் உரிமையை வாங்க் ரீமேக் செய்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

Share this story