அஜித் பாணியில் அசத்திய மலையாள சூப்பர் ஸ்டார்

அஜித் பாணியில் அசத்திய மலையாள சூப்பர் ஸ்டார்

படக்குழுவினருக்கு தன் கையால் தானே பிரியாணி சமைத்து விருந்து வைப்பது அஜித்தோட வழக்கம். தலையோட இந்த பாணியில் இப்போது மலையாள சூப்பர் ஸ்டாரும் கலக்குகிறார்.

அஜித் பாணியில் அசத்திய மலையாள சூப்பர் ஸ்டார்
அஜித் பாணியில் அசத்திய மலையாள சூப்பர் ஸ்டார்

தல மாதிரி தானே சமைக்கலன்னாலும் தன் சார்பாக பிரியாணி தயார் செய்து எடுத்து வந்து படக்குழுவினருக்கு விருந்து வைத்திருக்கிறார் மோகன்லால்.

மலையாளத்தில் மோகன்லால் – மீனா நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படம் நல்ல வசூலை பெற்று பெரும் வெற்றிபெற்றதால், அந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் மொழி ரீ மேக் ஆகியது. தமிழில் கமல்ஹான் – கவுதமி நடிப்பில் ‘பாபநாசம்’என்று ரீமேக் ஆகி இங்கேயும் ஹிட் அடித்தது.

அஜித் பாணியில் அசத்திய மலையாள சூப்பர் ஸ்டார்
அஜித் பாணியில் அசத்திய மலையாள சூப்பர் ஸ்டார்

இத்தனை வரவேற்பு இருப்பதால் த்ரிஷ்யம் -2 துவங்கி இருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கின் தளர்வுக்கு பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, நடைபெற்று வருகிறது. மோகன்லால், மீனா என்று த்ரிஷ்யம் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றார்கள்.

படப்பிடிப்பின்போது பிரியாணி எடுத்து வந்து எல்லோருக்கும் மோகன்லால் விருந்து வைத்தது குறித்து மீனா மற்றும் அவருக்கு மகள்களாக நடிக்கும் நடிகைகளும் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.

பிரியாணி கொடுத்த மோகன்லாலுக்கு நன்றி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this story