கொஞ்சம் கவலை; நிறைய சந்தோசம் தந்த அஜித்

கொஞ்சம் கவலை; நிறைய சந்தோசம் தந்த அஜித்

வலிமை படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியிருக்கிறது. ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்ற ஷூட்டிங்கில் அஜித் கலந்துகொண்டபோது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வெளியாகிப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த போட்டோக்கள் வலைத்தங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க, வலிமை படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்பட்டதை அடுத்து #Valimai என்ற ஹேஷ்டேக்கினை இந்திய அளவில் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றார்கள்.

கொஞ்சம் கவலை; நிறைய சந்தோசம் தந்த அஜித்

கொரோனா லாக் டவுன் காலங்களுக்கு பிறகு இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்கப்போகுதோ என்ற கேள்வி இருந்தது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக அஜித் இப்போதைக்கு நடிக்க வரமாட்டார் என்றே சொல்லி வந்தனர். இந்நிலையில் திடீரென்று அவர் ஷூட்டிங்கில் பங்கேற்றிருக்கும், செம ஃ பிட்டாக இருக்கும் அஜித்தை பார்த்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

கொஞ்சம் கவலை; நிறைய சந்தோசம் தந்த அஜித்

அதே நேரத்தில், அவரது கையில் இருக்கும் காயத்தின் தழும்பைப்பார்த்து கொஞ்சம் கவலைப்படுகிறார்கள். லாக்டவுனுக்கு முன்னர் நடந்த ஷூட்டிங்கில் காலில் அடிபட்டு கொஞ்சம் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இப்போது கையிலும் அடிபட்டிருக்கும் காயத்தை போட்டோவில் பார்த்த அவரது ரசிகர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்துகிறார்கள்.

எத்தனையோ அறுவை சிகிச்சைகளை பார்த்துவந்த அஜித்துக்கு இந்த தழும்பு எல்லாம் ச்சும்மா…

Share this story