பிரியங்கா சோப்ராவை இயக்கும் ஜிம் ஸ்ட்ரோஸ்!

பிரியங்கா சோப்ராவை இயக்கும் ஜிம் ஸ்ட்ரோஸ்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்த கல்கண்டு பிரியங்கா சோப்ரா 2000ல் உலக அழகி ஆனார். 2003ல் தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்தார். அப்படம் சரியாக போகவில்லை என்பதால் தமிழில் அடுத்தடுத்த படங்கள் அமையவில்லை. ஆனாலும், இந்தி அவருக்கு சிகப்பு கம்பளம் விரித்தது. இந்தியின் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், ஹாலிவுட்டுக்கும் போனார்.

பிரியங்கா சோப்ராவை இயக்கும் ஜிம் ஸ்ட்ரோஸ்!

பே வாட்ச், எ கிட் லைக் ஜாக், இஸ்னாட் ஹாலிவுட் படங்களில் நடித்தபிரியங்கா சோப்ரா, அடுத்ததாக ஜிம் ஸ்ட்ரோஸ் டைரக்‌ஷனில் நடிக்கிறார். அவருடன் சாம் ஹுயூகன், பாடகி செலைன் டியன் நடிக்கின்றார்கள்.

இது, ‘எஸ்.எம்.எஸ். பர் டிச்’ எனும் ஜெர்மானிய சினிமாவின் ரீமேக்.

ஜிம் ஸ்ட்ரோஸ் மற்றும் சாம் ஹூயூகன், செலைன் டியனுடன் வொர்க் பண்ணப்போறதை தனக்கு கிடைத்த கவுரமாக கருதுவதாக பிரியங்க டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

Share this story