ரஹ்மான் மகளின் பாட்டு! சர்ச்சைக்கு இடமளிக்காத புர்கா சிறுமி!

ரஹ்மான் மகளின் பாட்டு! சர்ச்சைக்கு இடமளிக்காத புர்கா சிறுமி!

உங்கள் அன்புக்கு நன்றி..இதோ ஃபரிஷ்தாவின் வரைபட பாடல் தொகுப்பை கண்டு களியுங்கள்… என்று மகள் பாடிய பாடலை வெளியிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ரஹ்மான் மகளின் பாட்டு! சர்ச்சைக்கு இடமளிக்காத புர்கா சிறுமி!

மறைந்த பிரபல இசையமைப்பாளர் சேகரின் மகன் ஏ.ஆர்.ரஹ்மானின் உலகம் முழுவதும் தனது இசை சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார். இவரது சகோதரி ஏ.ஆர்.ரெய்கானாவும் இசையமைப்பாளர். சகோதரியின் மகன் ஜி.வி.பிரகாஷ், குழந்தையில் பாடியவர் பின்னாளில் பிரபல இசையமைப்பாளர் ஆனார்.

ரஹ்மான் மகளின் பாட்டு! சர்ச்சைக்கு இடமளிக்காத புர்கா சிறுமி!

ரஹ்மானின் மகன் ஏ.அர்.அமீன், ஒரு இசை ஆல்பத்தினை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். அவரைத்தொடர்ந்து ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மானும், ‘ஃபரிஸ்தா’ பாடலின் மூலம் பாடகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார். முன்னதாக இவர் கீ போர்டு வாசிப்பின் மூலமாக தன்னை இசையுலகில் அறிமுகம் செய்துகொண்டவர் கதீஜா.

அண்மையில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் கடைசிப்படம் ‘தில் பேச்சாரா’. சுஷாந்த் சிங் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தில் பேச்சாரா படத்தின் டைட்டில் பாடலுக்கு ரகுமானின் மகள் கதீஜா ரஹ்மான், கீ போர்டு வாசித்து அதை வீடியோவாக வெளியிட்டார். ரகுமான் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இசையில் புலைமை இருக்கும் கதீஜா, பாடுவதிலும் நல்ல திறமை இருக்குது. அதை ‘ஃபரிஸ்தா’ திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார். அன்பையும், மத ஒற்றுமையும் வலியுறுத்தும் இப்பாடல், அனிமேஷன் வீடியோ வடிவில் வெளியாகி இருக்கிறது.

இந்த பாடல் யூ டியூப் இணையத்தில் வெளியாகி வைரலாகிறது. இப்பாடலுக்கு இசை அமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், ’உங்கள் அன்புக்கு நன்றி..இதோ ஃபரிஷ்தாவின் வரைபட பாடல் தொகுப்பை கண்டு களியுங்கள்’ என்று தனது டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

கதீஜா, புர்கா அணிந்து செல்வது பெரிய அளவில் சர்ச்சை ஆனது. அது அவர் விருப்பம். நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என்றெல்லாம் கூட ரஹ்மான் விளக்கம் அளித்திருந்தார். இந்த பாடலின் வீடியோவிலும் சிறுமி புர்கா அணிந்து பாடுவது போல் இருக்கிறது. ஆனால், அன்பையும், மத ஒற்றுமையும் வலியுறுத்தும் இப்பாடலில் அதுவெல்லாம் ஒரு சர்ச்சைக்கு இடமளிக்காது.

Share this story