விஷாலுடனான செய்தியை மறுக்கும் சமீராரெட்டி

விஷாலுடனான செய்தியை மறுக்கும் சமீராரெட்டி

அவன் இவன் படத்திற்கு பிறகு ஆர்யாவும் விஷாலும் இணைந்து நடித்து வரும் படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களுக்கு ஆனந்த் சங்கர் இயக்கி வரும் படத்திற்கும் இன்னமும் டைட்டில் வைக்கவில்லை. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இப்படத்தின் ஓபனிங் பாடலை ஷூட் செய்திருக்கிறார்கள். பிரிந்தா மாஸ்டர் அந்த பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார். வெற்றிகரமான ஓபனிங் பாடலை முடித்திருக்கிறோம் என்று விஷாலும் டுவிட்டரில் பதிவிட்டிருகிறார்.

விஷாலுடனான செய்தியை மறுக்கும் சமீராரெட்டி

விஷாலுக்கு ஆர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

இப்படத்தில் சமீரா ரெட்டி ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக ஒரு தகவல் வலம் வந்தது.

விஷாலுடனான செய்தியை மறுக்கும் சமீராரெட்டி
விஷாலுடனான செய்தியை மறுக்கும் சமீராரெட்டி

வாரணம் ஆயிரம் மூலம் தமிழுக்கு வந்த அவர், விஷாலுடன் வெடி படத்தில் ஜோடி போட்டிருந்தார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் அவர் இப்படத்தில் நடிக்கிறார் என்றும், வெடி படத்தில் நடித்த சமீரா, 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஷாலுடன் நடிக்கிறார் என்ற வரும் செய்திக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் சமீரா.

குடும்பம், பிள்ளைகள்தான் முக்கியம். அதை தாண்டி நடிக்க முடிவு செய்திருக்கிறேன். ஆனால், விஷால் படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

Share this story