அடுக்குமொழிக்கு ஸ்டாப் போட்டதால் அப்செட்டான டி.ஆர்.

அடுக்குமொழிக்கு ஸ்டாப் போட்டதால் அப்செட்டான டி.ஆர்.

திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தாலும் விபிஎப் விவகாரத்தினால் புதுப்படங்களை வெளியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது. விபிஎப் விவகாரத்தை அப்புறமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம். முதலில் 10-ம் தேதி திரையரங்குகள் திறக்கும்போது புதுப்படங்களை ரிலீஸ் செய்ய விடுங்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அடுக்குமொழிக்கு ஸ்டாப் போட்டதால் அப்செட்டான டி.ஆர்.
அடுக்குமொழிக்கு ஸ்டாப் போட்டதால் அப்செட்டான டி.ஆர்.

மூன்று நாட்களே இருக்கும் நிலையில் என்ன முடிவு எட்டப்போறதோ?

இதற்கிடையில், விபிஎப் விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை நடத்தி வந்தார்கள். முதல் நாள் ஆலோசனையில் ஏற்பட்ட அதிருப்தியினால் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இரண்டாம் நாள் ஆலோசனையில் பங்கேற்கவில்லை. இனிமேலும் அவர்கள் ஆலோசனையில் பங்கேற்பதாக தெரியவில்லை.

இரண்டாம் நாள் ஆலோசனைக்கூட்டத்தில் டி.ராஜேந்தர் வழக்கம்போலவே அடுக்குமொழியில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று எழுந்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்க ரோகிணி பன்னீர்செல்வம், ’’அந்த காலத்துல இருந்தே அடுக்குமொழிதானா…அதெல்லாம் இப்ப வேணாம். டக்குன்னு விசயத்துக்கு வாங்க.’’என்று சொல்ல, இதை கொஞ்சமும் எதிர்பார்த்திராத டி.ராஜேந்தர் அப்செட்டாகி அதற்கு மேல் எதிவும் பேசாமல் அமர்ந்திருக்கிறார்.

Share this story