மாவட்ட கலெக்டர் கொடுத்த ‘வலிமை’ அப்டேட்… ரசிகர்கள் வரவேற்பு…

மாவட்ட கலெக்டர் கொடுத்த ‘வலிமை’ அப்டேட்… ரசிகர்கள் வரவேற்பு…

வலிமை படத்தின் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் மாவட்ட கலெக்டர் ஒருவர்.

மாவட்ட கலெக்டர் கொடுத்த ‘வலிமை’ அப்டேட்… ரசிகர்கள் வரவேற்பு…

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் அட்டகாசமாக உருவாகி வரும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கும் இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படத்தை விரைவில் வெளியிட இறுதிக்கட்ட பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் கொடுத்த ‘வலிமை’ அப்டேட்… ரசிகர்கள் வரவேற்பு…

ஆனால் படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதல் இதுவரை எந்த அப்டேட்டும் இந்த படம் குறித்து வெளியிடப்படவில்லை. இதனால் டென்ஷனான ரசிகர்கள் தொடர்ச்சியாக வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர். இரண்டு வருடங்களாக தயாராகி வரும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் படத்தின் லுக்காவது வெளியிடுங்கள் என வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை எதுவும் வெளியாகாத நிலையில் அவ்வெப்போது வலிமை அப்டேட் ஹேஷ்டெக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து சென்னை வந்த பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் வலிமை அப்டேட் கேட்டனர்.

மாவட்ட கலெக்டர் கொடுத்த ‘வலிமை’ அப்டேட்… ரசிகர்கள் வரவேற்பு…

ரசிகர்களின் இந்த செயலைப் பார்த்து டென்ஷனாகி அஜீத் அறிக்கை கொடுக்கும் அளவிற்கு நிலைமை இருந்தது. அந்த அறிக்கையில் ரசிகர்கள் அமைதி காக்கவேண்டும் என நடிகர் அஜீத் வலியுறுத்தனார். ஆனால் இதுவரை வலிமை படத்தின் அப்டேட் வெளியாகாமல் உள்ளது ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கும் விஷயமாக உள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், வலிமை குறித்து அப்டேட் என்று ஒரு போஸ்ட்டை பகிர்ந்துள்ளார். அதில் ‘வலிமை அப்டேட் மக்களே’ என கூறி வித்தியாசமான முறையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். மேலும், ‘ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது’ என வாக்கு செலுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். கலெக்டரின் இந்த பதிவுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இதையடுத்து இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Share this story