‘96’ தெலுங்கு ரீமேக்: விஜய் சேதுபதி ரோலில் நடிக்க விரும்பும் பிரபல நடிகர்!

‘96’ தெலுங்கு ரீமேக்: விஜய் சேதுபதி ரோலில் நடிக்க விரும்பும் பிரபல நடிகர்!

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘96’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகவுள்ளது.

ஹைதராபாத்: விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘96’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகவுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 96. இந்த படத்தில் முதன் முறையாக விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் அக்.5ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இப்படம் ரிலீசாவதற்கு முன்பாகவே இது குறித்து நல்ல விமர்சனங்கள் வெளியாகி, ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காதல் படமாக உருவாகியுள்ள ‘96’ திரைப்படத்தின் இசை, டீசர், டிரைலர் போன்றவை அதிக கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், இப்படம் ரிலீசாவதற்குள்ளாகவே இதன் தெலுங்கு ரீமேக் உரிமத்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றியுள்ளார். தெலுங்கில் சமந்தாவும், நானியும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

‘96’ தெலுங்கு ரீமேக்: விஜய் சேதுபதி ரோலில் நடிக்க விரும்பும் பிரபல நடிகர்!

இப்படத்தின் பிரீமியரை பார்த்து கண் கலங்கிய நானி, விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. விரைவில் தெலுங்கில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story