தன் மார்பகம் பற்றி தவறாக கமெண்ட் அடித்த நெட்டிசன்களுக்கு புகைப்படத்துடன் பதிலடி கொடுத்துள்ள பிக்பாஸ் பிரபலம்!

தன் மார்பகம் பற்றி தவறாக கமெண்ட் அடித்த நெட்டிசன்களுக்கு புகைப்படத்துடன் பதிலடி கொடுத்துள்ள பிக்பாஸ் பிரபலம்!

தன் உடல் எடை கூடியதைப் பற்றி கமெண்ட் அடுத்தவருக்கு நடிகை அபிராமி பதிலடி கொடுத்துள்ளார்.

தற்போது நடிகைகளின் பதிவிற்கு சிலர் மோசமான கமெண்ட்கள் பதவிடுவதும், அதற்கு அவர்கள் தக்க பதிலடி கொடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது. உலகமே கைக்குள் அடங்கியிருக்கிறது என்றாலும் இந்த மாதிரி சில மோசமான செயல்களுக்காகவும் பலர் அதைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

தன் மார்பகம் பற்றி தவறாக கமெண்ட் அடித்த நெட்டிசன்களுக்கு புகைப்படத்துடன் பதிலடி கொடுத்துள்ள பிக்பாஸ் பிரபலம்!

தற்போது நடிகை அபிராமி உடல் எடை கூடியதைப் பற்றி ஒருவர் கமெண்ட் அடித்துள்ளார். அதையடுத்து அபிராமி அந்த நபருக்கு பதிலளித்துள்ளார்.

“சமீபத்தில் என் மார்பளவு பெரியதாக இருப்பதைப் பற்றி எனக்கு கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆம், ஏனென்றால் நான் வளைவுகள் கொண்ட ஒரு தென்னிந்திய பெண். இதுதான் உங்களைப் போன்ற ஆண்களிடமிருந்து எங்களை வேறுபடுத்தும் அம்சங்களில் ஒன்று என்று கூறி உங்களுக்காக நான் வருந்துகிறேன். ஏனென்றால் நீங்களும் உங்கள் அம்மா இல்லாமல் இந்த உலகத்திற்குள் வந்திருக்க முடியாது என்பதை நீங்கள் நன்கு அறிந்திருக்கலாம்.

தன் மார்பகம் பற்றி தவறாக கமெண்ட் அடித்த நெட்டிசன்களுக்கு புகைப்படத்துடன் பதிலடி கொடுத்துள்ள பிக்பாஸ் பிரபலம்!

எனவே என்னை நீங்கள் அசிங்கப்படுவதற்கு முன்னாள் உங்கள் அம்மாவை அசிங்கப்படுத்திவிட்டிர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெண்களை மரியாதையுடன் பார்க்கத் தொடங்குங்கள். இது ஒரு ஜனநாயக நாடு, வெட்கமில்லாத, ஒழுக்கமற்ற நாடு அல்ல. எனவே புத்திசாலித்தனமாக பேசுங்கள், புத்தியில்லாமல் பேசாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அபிராமியின் இந்தக் கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story