சிரஞ்சீவி பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த 'ஆச்சார்யா' படக்குழு!

சிரஞ்சீவி பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த 'ஆச்சார்யா' படக்குழு!

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு அவர் நடிக்கும் ஆச்சார்யா படத்தில் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த 'ஆச்சார்யா' படக்குழு!
கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்திற்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆச்சாரியா படத்தை ராம்சரனின் கோனிடேலா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காஜல் அகர்வால் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.இந்தப் படத்தில் இரு வேடங்களில் நடிக்கும் சிரஞ்சீவி அரசு அதிகாரியாகவும், நக்சலைட் ஆகவும் நடித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆச்சர்யா படப்பிடிப்பிற்காக மிகப் பெரிய கோவில் செட் ராமோஜி பிலிம் சிட்டியில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரஞ்சீவி பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த 'ஆச்சார்யா' படக்குழு!
தற்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் பழங்கால கோயில் ஒன்று காட்டப்படுகிறது. பின்னர் யாழி ஒன்றின் உருவம் அதைத்தொடர்ந்து சிரஞ்சீவி பல நபர்கள் முன்னாள் கையில் கத்தியுடன் மாஸாக நிற்கிறார். இந்த மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Share this story