சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!?

சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!?

சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் செய்தி உறுதியாகியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்திற்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆச்சாரியா படத்தை ராம்சரனின் கோனிடேலா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காஜல் அகர்வால் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.இந்தப் படத்தில் இரு வேடங்களில் நடிக்கும் சிரஞ்சீவி அரசு அதிகாரியாகவும், நக்சலைட் ஆகவும் நடித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆச்சர்யா படப்பிடிப்பிற்காக மிகப் பெரிய கோவில் செட் ராமோஜி பிலிம் சிட்டியில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!?
சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆச்சார்யா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆச்சார்யா படத்தை  அடுத்த ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட திட்டமிட்டதாகத் தெரிகிறது. அதனால் ஆச்சார்யா படத்தை அதற்குள் தயார் செய்யுமாறு கொரட்டலா  சிவாவிடம் சிரஞ்சீவி கேட்டுக் கொண்டதாகவும், மேலும் தாமதங்கள் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கின்றன. எல்லாமே திட்டத்தின் படி நடந்தால், ஆச்சார்யா 2021 ஏப்ரல் 9 அன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story