ஆட்டோவில் சென்ற ‘தல’… வைரலாகும் அஜீத்தின் வீடியோ…

ஆட்டோவில் சென்ற ‘தல’… வைரலாகும் அஜீத்தின் வீடியோ…

நடிகர் அஜீத் ஆட்டோவில் செல்லும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

ஆட்டோவில் சென்ற ‘தல’… வைரலாகும் அஜீத்தின் வீடியோ…

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக உள்ள நடிகர் அஜீத், தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். எச்.வினோத் இயக்கிய இப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 1ம் தேதி அஜீத்தின் பிறந்தநாளில் வெளியாகவுள்ளது.

ஆட்டோவில் சென்ற ‘தல’… வைரலாகும் அஜீத்தின் வீடியோ…

சினிமாவில் ஒருபுறம் இப்படி கலக்கிக்கொண்டிருந்தாலும், பைக், கார் ரேஸ்களில் கலந்துக்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜீத். இதோடு உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். இதுமட்டுமல்லாமல் போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற பொது நலப்பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார்.

ஆட்டோவில் சென்ற ‘தல’… வைரலாகும் அஜீத்தின் வீடியோ…

இதேபோன்று துப்பாக்கி சுடுதலிலும் ஆர்வம் கொண்ட அஜீத், சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். நடிகர் அஜீத்தை பொதுவெளியில் பார்ப்பது என்பது அரிதான விஷயமாக இருந்த நிலையில், தற்போது அந்த நிலைமாறி அடிக்கடி பார்க்கமுடிகிறது. அண்மையில் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்காக ரைபிள் கிளப்பில் அஜீத் வந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் நடிகர் அஜீத் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் மிக சாதாரணமாக ஒரு ஆட்டோவில் அவர் பயணிக்கும் வீடியோ அது. அந்த ஆட்டோவை பின்தொடர்ந்த ரசிகர் ஒருவர் இந்த வீடியோவை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்று தெரிகிறது.

Share this story