வலிமை படத்தில் மீண்டும் அம்மா செண்டிமெண்ட் காட்சியில் நடிக்கும் அஜித் !

வலிமை படத்தில் மீண்டும் அம்மா செண்டிமெண்ட் காட்சியில் நடிக்கும் அஜித் !

அஜித் – எச்.வினோத் கூட்டணி இரண்டாவதாக ‘வலிமை’ படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி எனும் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.போனி கபூர் தயாரிக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

மூத்த நடிகை சுமித்ரா அஜித்தின் தாயாக இப்படத்தில் பெரும்பங்கு வகிக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. இவர் பொதுவாக மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் தமிழ் திரைப்படங்களில் தாயாக நடித்திருப்பவர். முன்பு அஜித்துடன் பகைவன் மற்றும் வீரம் படங்களிலும் நடித்திருந்தார்.

வலிமை படத்தில் மீண்டும் அம்மா செண்டிமெண்ட் காட்சியில் நடிக்கும் அஜித் !

கடந்த சில வருடங்களாகவே நடிகர் அஜித் தங்கை ,மகள், மனைவி செண்டிமெண்ட் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக வரலாறு படத்தில் அம்மா சென்டிமென்டில் நடித்திருப்பார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான அந்த படத்தில் அம்மா செண்டிமெண்ட் பாடலும் இடம்பெற்று ஹிட் ஆனது. அதைத்தொடர்ந்து 14 வருடங்களுக்கு பிறகு அஜித் மீண்டும் அம்மா சென்டிமென்டில் நடிக்க உள்ளார். பைக் ரேஸிங் சம்மந்தப்பட்ட கதையில் அம்மா செண்டிமெண்ட் இருப்பதால், படம் முடியும் போது அஜித் ரசிகர்கள் கண்ணீரும் கர்ச்சீப்புமாக மக தான் வெளியே வருவார்கள் போலும்!

Share this story