துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய அஜீத்…

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய அஜீத்…

சென்னையில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட நடிகர் அஜீத் தங்கம் வென்றுள்ளார்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய அஜீத்…

நடிகர் அஜீத் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கூறப்படுகிறது.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய அஜீத்…

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக உள்ள அஜீத், நடிப்பு மட்டுமல்ல, பைக் ரேஸ்,கார் ரேஸ் போன்ற விஷயங்களில் மிகவும் ஆர்வமாக இருப்பார். பார்முலா கார் பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளார். மேலும் போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், ட்ரோன் பயிற்சி அளிப்பது என பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய அஜீத்…

இதுபோன்று ஆர்வமாக இருக்கும் அஜீத் துப்பாக்கி சுடுதல் போட்டிகளையும் விட்டுவைக்கவில்லை. அதன்படி மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இதற்காக நடிகர் அஜீத் சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்தார். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகியாகி ரசிகர்களை ஆச்சர்யமூட்டியது.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய அஜீத்…

இதையடுத்து 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜீத் கலந்துகொண்டு அடுத்தடுத்த சுற்றுகளில் தேர்வாகி வந்தார். அதைத் தொடர்ந்து தற்போது அவர் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அஜீத்துக்கு விருதும் வழங்கப்பட்டது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share this story