கொரானா நேரத்தில் பெப்சிக்கு நிதியுதவி… அஜீத் செயலால் நெகிழ்ந்த தொழிலாளர்கள் !

கொரானா நேரத்தில் பெப்சிக்கு  நிதியுதவி…  அஜீத் செயலால் நெகிழ்ந்த தொழிலாளர்கள் !

கொரானா நேரத்தில் பெப்சி திரைப்பட தொழிலாளார்களுக்கு நடிகர் அஜீத் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

நடிகர் அஜீத், எச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கொரானா தொற்று அதிகரித்ததன் காரணமாக இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தமுடியாமல் படக்குழு தவித்து வருகிறது. இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை கூட வெளியிட முடியாத அளவுக்கு சோதனையான காலமாக உள்ளது.

கொரானா நேரத்தில் பெப்சிக்கு  நிதியுதவி…  அஜீத் செயலால் நெகிழ்ந்த தொழிலாளர்கள் !

இதற்கிடையே கொரானா 2வது அலையின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடைந்து வருகிறது. தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் 30 ஆயிரத்தை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறந்து வருவது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. பெட் பற்றாக்குறையால் மருத்துவமனை வெளியே நோயாளிகள் படுத்துக்கிடக்கின்றனர்.

கொரானா நேரத்தில் பெப்சிக்கு  நிதியுதவி…  அஜீத் செயலால் நெகிழ்ந்த தொழிலாளர்கள் !

நிலைமையை சமாளிக்க முடியாமல் தமிழக அரசு தவித்து வரும் நிலையில், நிவாரண நிதி அளிக்கும்படி பிரபலங்களை கேட்டுக்கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின். அந்தவகையில் நடிகர் அஜீத், கொரானா தடுப்பு நிதியாக 25 லட்சம் ரூபாயை வழங்கினார். இந்நிலையில் படப்பிடிப்புகள் இல்லாததால் சினிமா துறையில் இருக்கும் அடிமட்ட தொழிலாளர்களான, பெப்சி தொழிலாளர்கள் வருமானம் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இது பற்றி அறிந்த நடிகர் அஜீத், அவர்களின் துயர்துடைக்க பெப்சி சங்கத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்த தகவலை பெப்சி சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று பத்திரிக்கையாளர்களிடன் தெரிவித்தார். இதனால் பெப்சி தொழிலாளர்கள் மனம் நெகிழ்ந்துள்ளனர்.

Share this story