‘புஷ்பா’ படத்தில் வில்லனாக நடிக்கும் ஆர்யா !

‘புஷ்பா’ படத்தில் வில்லனாக நடிக்கும் ஆர்யா !

தெலுங்கு பட நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்க இருக்கும் ‘புஷ்பா’ திரைப்படப் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கின்றன.

தமிழ் கன்னடம் மலையாளம் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை சுகுமார் இயக்குகிறார்.
கொரோனா காலகட்டத்தால் தள்ளிப்போன இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது.

‘புஷ்பா’ படத்தில் வில்லனாக நடிக்கும் ஆர்யா !

இந்நிலையில் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பதென்ற குழப்பம் நிலவி வந்தது.முதலில் நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி பின்னர் படத்தில் இருந்து விலகினார்.இதனால் இந்த படத்தின் வில்லனாக விஜய்சேதுபதிக்கு பதில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது,

ஆனால் தற்போது இவர்கள் யாருமில்லாமல் நடிகர் ஆர்யா தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . நடிகர் ஆர்யா விஷால் உடன் இணைந்து நடிக்கும் எனிமி படத்திலும் வில்லனாக தான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story