படப்பிடிப்பில் வில்லனை அடிக்கமறுத்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி !

படப்பிடிப்பில் வில்லனை அடிக்கமறுத்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி !

கொரட்டலா சிவா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்திற்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை ராம்சரனின் கோனிடேலா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காஜல் அகர்வால் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

படப்பிடிப்பில் வில்லனை அடிக்கமறுத்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி !

நாளுக்கு நாள் நன்மைகளை செய்துவரும் பாலிவுட் நடிகர் சோனு சூட்டை மக்கள் ஒரு நிஜ ஹீரோவாக பார்ப்பதால் , இனி வில்லன் கேரக்டர் கிடைத்தாலும் நடிக்கப்போவதில்லை என சோனு சூட் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.ஆனால் ஏற்கெனெவே ஒப்பந்தமான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் வில்லனை அடிக்கமறுத்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி !

அந்தவகையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் ஆச்சார்யா படத்தில் சோனு வில்லன் காதபத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் சிரஞ்சீவியும்- சோனுவும் மோதிக்கொள்ளும் ஒரு காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது .இதில் சோனுவை சிரஞ்சீவி அடித்து மிதிப்பதைப் போன்று ஒரு காட்சி உள்ளதாம். ஆனால் ஆக்ஷன் காட்சியில் என்னால் சோனுவை அடிக்க முடியாது. நான் அவரை அடித்தால் மக்கள் என்னை சபித்துவிடுவார்கள் எனக்கூறி சிரஞ்சீவி அந்தத் காட்சியில் மாற்றம் செய்யுமாறு சொல்லிவிட்டாராம். இந்த நிகழ்வை சோனு சூட் சமீபத்தில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் சோனுசூட்டிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தெலுங்கானா மக்கள் கோவில்கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this story