சாரா அலிகான் நடிகர் தனுஷை படுத்தும்பாடு !

சாரா அலிகான் நடிகர் தனுஷை படுத்தும்பாடு !

கோலிவுட்,பாலிவுட் ,ஹாலிவுட் என பிஸியாக இருக்கும் நடிகர் தனுஷ் தற்போது அட்ராங்கி ரே படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்த திரைப்பதை தனுஷ் ஹிந்தியில் நடித்து வெளியான ராஞ்சனா படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்றதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.


தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள படக்குழு படப்பிடிப்பை டெல்லி மற்றும் மும்பை சுற்றுவட்டார பகுதியில் நடத்தவுள்ளது.சமீபத்திய படப்பிடிப்பு ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலில் நடந்தது.

சாரா அலிகான் நடிகர் தனுஷை படுத்தும்பாடு !


இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தனுஷ் படக்குழுவுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் சாரா அலிகான் மற்றும் படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் தனுஷ் மகிழ்ச்சியுடன் தோளில் சாய்ந்தபடி இருக்கிறார்.இந்த புகைப்படத்தை சாரா அலிகான் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

Share this story