நாளை வெளியாகிறது நடிகர் கௌதம் கார்த்திக் படத்தின் முக்கிய அறிவிப்பு…

நாளை வெளியாகிறது நடிகர் கௌதம் கார்த்திக்  படத்தின் முக்கிய அறிவிப்பு…

நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளது.

நாளை வெளியாகிறது நடிகர் கௌதம் கார்த்திக்  படத்தின் முக்கிய அறிவிப்பு…

‘தேவராட்டம்’ படத்திற்கு பிறகு நடிகர் கௌதம் கார்த்திக் படம் எதுவும் வெளியாகவில்லை. தற்போது எழில் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் கௌதம் கார்த்திக். இயக்குனர் பார்த்திபன் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இப்படத்தை காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் விஜய்குமரன் தயாரித்து வருகிறார்.

நாளை வெளியாகிறது நடிகர் கௌதம் கார்த்திக்  படத்தின் முக்கிய அறிவிப்பு…

கௌதம் கார்த்திக்கு ஜோடியாக சாய் ப்ரியா தேவா இந்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது. க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

நாளை வெளியாகிறது நடிகர் கௌதம் கார்த்திக்  படத்தின் முக்கிய அறிவிப்பு…

இந்நிலையில் கௌதம் கார்த்திக் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நாளை காலை 11.05 மணிக்கு வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது என்ன அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அநேகமாக இந்த அறிவிப்பு நந்தா பெரியசாமி இயக்கும் புதிய படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Share this story