மு.க.ஸ்டாலினுடன் நடிகர் கமல் சந்திப்பு… தேர்தலில் வெற்றிப்பெற்றதற்கு வாழ்த்து…

மு.க.ஸ்டாலினுடன் நடிகர் கமல் சந்திப்பு… தேர்தலில் வெற்றிப்பெற்றதற்கு வாழ்த்து…

தேர்தலில் மாபெரும் வெற்றிப்பெற்ற மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகளை ஆட்சி செய்வதற்கான ஜனநாயக திருவிழா கடந்த 6ம் தேதி நடைபெற்றது. ஐந்து முனை போட்டி நிலவிய இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் வேட்பாளர்களை நிறுத்தினர். இதோடு கமலின் மக்கள் நீதி மய்யம், சீமான், டிடிவி தினகரன் ஆகியோரும் தேர்தலில் களம் கண்டனர்.

மு.க.ஸ்டாலினுடன் நடிகர் கமல் சந்திப்பு… தேர்தலில் வெற்றிப்பெற்றதற்கு வாழ்த்து…

இதையடுத்து இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. அதில் திமுக தலைமையிலான கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி அமோகமாக வென்றது. அதேபோன்று கமலும் கோவை தெற்கு தொகுதியில் நின்று களம் கண்டார். விறுப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கையில் முதலில் இருந்து கமல் முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால் இறுதிக்கட்ட சுற்றுகளில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் அதிக வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் கமல் தோல்வியடைந்தார்.

மு.க.ஸ்டாலினுடன் நடிகர் கமல் சந்திப்பு… தேர்தலில் வெற்றிப்பெற்றதற்கு வாழ்த்து…

இந்நிலையில் அமோகமாக வெற்றிப்பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினை பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும், சினிமாத்துறையினரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல், மு.க.ஸ்டாலினை, அவரது இல்லத்தில் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின்போது நடிகர் உதயநிதியும் உடன் இருந்தார்.

Share this story