நடிகர் மகேஷ் பாபுடன் இணையும் சிம்பு பட நடிகை…

நடிகர் மகேஷ் பாபுடன் இணையும் சிம்பு பட நடிகை…

மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிகை நிதி அகர்வால் நடிக்க உள்ளார்.

நடிகர் மகேஷ் பாபுடன் இணையும் சிம்பு பட நடிகை…

இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் நிதி அகர்வால். ரசிகர்களின் வரவேற்பை அடுத்து ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக களமிறங்கினார். அதன்பிறகு சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்தார். கிராமத்து பெண்ணாக தோன்றி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

நடிகர் மகேஷ் பாபுடன் இணையும் சிம்பு பட நடிகை…

இதையடுத்து ‘தடம்’ படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து கலக்கியுள்ளார். தற்போது தெலுங்கில் பிசியாக இருக்கும் இவர், பவன் கல்யாண் நடிக்கும் ‘ஹரிஹர வீரமல்லு’ என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். கிரிஷ் இயக்கும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிய உள்ளது.

நடிகர் மகேஷ் பாபுடன் இணையும் சிம்பு பட நடிகை…

இந்நிலையில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தில் நிதி அகர்வால் நடிக்கவிருக்கிறார். திரிவிக்ரம் இயக்கும் இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மகேஷ்பாபு தற்போது ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். கொரானா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த படத்தை முடித்து திரிவிக்ரம் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

Share this story