சலார் படத்தில் நடிக்க டிமாண்ட் செய்யப்படும் நடிகர் மோகன்லால் !

சலார் படத்தில் நடிக்க டிமாண்ட் செய்யப்படும் நடிகர் மோகன்லால் !

இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸுடன் கூட்டணி அமைத்து பிரம்மாண்ட படமான ‘சலார்’ படத்தை இயக்கவிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பைத் துவங்கினார்.

சலார் படத்தில் நடிக்க டிமாண்ட் செய்யப்படும் நடிகர் மோகன்லால் !

பிரம்மாண்ட ‘சலார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது.
இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு இயக்குனர் பிரசாந்த் நீல் மலையாள நடிகர் மோகன்லாலை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. த்ரிஷம் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ஓய்வில் உள்ளார்.தமிழ்,தெலுங்கு, என் பிறமொழி படங்களிலும் நடிக்க விரும்பும் மோகன்லால் 2016 ம் ஆண்டு ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து தெலுங்கு மொழி திரைப்படமான ஜனதா கேரேஜ் என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார் அதன் பிறகு அவர் தெலுங்கு படங்களில் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் மிக பிரமாண்டமான திரைப்படமான சலார் படத்தில் நடிக்க மோகன்லால் ஒப்பந்தம் ஆவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

மேலும் இப்படத்தில் மோகன்லால் நடித்தால் தான் மலையாளத்தில் மொழிபெயர்க்கும்போது பக்கபலமாக இருக்கும் என்பதால் அவருக்கு 20 கோடிவரை சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் தயாராக உள்ளதாம்.

Share this story